முகப்பு
திருப்பூர்

தாளவாடியில் ரேஷன் அரிசி பறிமுதல்

தாளவாடி பகுதியில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து, தாளவாடி போலீஸார் சிக்கள்ளி பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:42 PM
பகிர்:

தாளவாடி பகுதியில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து, தாளவாடி போலீஸார் சிக்கள்ளி பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, தலமலையில் இருந்த வந்த மினிவேனை நிறுத்தி சோதனையிட்டபோது, 60 கிலோ எடை கொண்ட 10 மூட்டை ரேஷன் அரிசி கடத்துவது தெரியவந்தது.

கடத்தப்பட்ட ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேனை

பறிமுதல் செய்தனர்; வேன் டிரைவர் மதேஷை (21) கைது செய்து மாவட்ட உணவுத் தடுப்பு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →