திருப்பூர்

உடு​ம​‌லை​யி‌ல் புதிய ‌பேரு‌ந்‌து நி‌லை​ய‌ம் அமை‌க்​க‌ப்​ப​டுமா?

உடுமலை மத்தியப் பேருந்து நிலையம் இடநெருக்கடியால் சிக்கித் தவித்து வருவதால் தொலைதூர பேருந்துகளுக்கென தனியாகப் பேருந்து நிலையம்

வி.கே. ராஜமா​ணிக்கம்

உடுமலை மத்தியப் பேருந்து நிலையம் இடநெருக்கடியால் சிக்கித் தவித்து வருவதால் தொலைதூர பேருந்துகளுக்கென தனியாகப் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
பொள்ளாச்சி-திண்டுக்கல் 209 தேசிய நெடுஞ்சாலையில் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது உடுமலை மத்தியப் பேருந்து நிலையம். இந்தப் பேருந்து நிலையத்துக்குள் தொலைதூர அரசுப் பேருந்துகள் 110, தனியார் பேருந்துகள் 80 என மொத்தம் 190 பேருந்துகள் நாளொன்றுக்கு தலா 4 முறை வந்து செல்கின்றன.
இதுபோக, 70 அரசு நகரப் பேருந்துகள், 45 தனியார் பேருந்துகள் என மொத்தம் 115 பேருந்துகள் நாளொன்றுக்கு தலா 12 முறை வந்து செல்கின்றன. இந்த எண்ணிக்கை அடிப்படையில் உடுமலை மத்தியப் பேருந்து நிலையத்துக்குள் நாளொன்றுக்கு சுமார் 1,650 முறை பேருந்துகள் வந்து செல்கின்றன.
சுமார் 25 ஆயிரம் பேர் சராசரியாக உடுமலை பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். உடுமலை மத்தியப் பேருந்து நிலையத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் ஓட்டுநர்களும், நடத்துநர்களும், பயணிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.பேருந்துகள் வந்து செல்ல 5 வழிகள், பயணிகளுக்காக நடந்து செல்ல 2 வழிகள் என மொத்தம் 7 வழிகள் இந்தப் பேருந்து நிலையத்தில் உள்ளன. இந்த வழியை ஆட்டோ, இருசக்கர வாகன ஓட்டிகளும் பயன்படுத்துவதாலும், ஆக்கிரமிப்பாளர்களாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
பேருந்து நிலையத்தின் அமைப்பு ஒரே நீளவாக்காக இருப்பதால் பேருந்துகளை வரிசையில் நிறுத்துவதற்கும், வண்டிகளை வெளியே எடுப்பதற்கும் ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பயணிகள் அமருவதற்கும் பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லை.
இப்பிரச்னைக்குத் தீர்வாக தொலைதூர பேருந்துகளுக்கென பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, தொலைதூர பேருந்துகளுக்கு தனிப் பேருந்து நிலையம் அமைக்க தற்போதுள்ள பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள வி.பி.புரத்தில் வசித்து வந்த 300-க்கும் மேற்பட்டோர் 2009-இல் வெளியேற்றப்பட்டனர்.
ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக வி.பி. புரத்தில் பேருந்து நிலையம் அமைக்க பல்வேறு முட்டுக் கட்டைகள் ஏற்பட்டுள்ளன. பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றுக்குச் சொந்தமான 1.42 ஏக்கர் இடத்தை நகராட்சியின் பெயருக்கு மாற்றம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஆனால், நிலத்துக்கான தொகை அரசு சந்தை மதிப்பின்படி ரூ. 4.5 கோடியாகும். இதைச் செலுத்தினால் பேருந்து நிலையம் அமைக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள், பேருந்து ஓட்டுநர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் வி.பி.புரத்தில் தொலைதூர பேருந்து நிலையம் விரைவில் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து உடுமலை நகராட்சி ஆணையர் க.சரவணகுமார் கூறியதாவது:
வி.பி. புரத்தில் உள்ள 1.42 ஏக்கரில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாகப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டதன் பயனாக, நகராட்சியின் பெயருக்கு அந்த இடத்தை மாற்றிக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பேருந்து நிலையம் அமைப்பதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில், தொலைதூர பேருந்துகளுக்கான புதிய பேருந்து நிலையம் அமைப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சூரிய ஒளி மின் அமைப்பு: முதல்வர் நாயப் சிங் சைனி

மதுரையில் நாளை(டிச.07) முதலீட்டாளர்கள் மாநாடு: 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!

ஹரித்வார்: மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை கடித்துக் குதறிய எலிகள்

ஸ்வதேஷ் ஃப்ளாக் ஷிப் திறப்பு விழாவில் பாலிவுட் பிரபலங்கள் - புகைப்படங்கள்

கனடாவிலிருந்து இந்தியர்களை அமெரிக்காவுக்குக் கடத்த சர்வதேச அளவில் சதி! பெண் மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT