திருப்பூர்

திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதியாளர் மர்ம மரணம்

DIN

திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதியாளர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர், 15 வேலம்பாளையத்தை அடுத்த சொர்ணபுரி விரிவு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் ( 51). இவர் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி - ஏற்றுமதி  தொழில் செய்து வந்தார். திருப்பூர், அண்ணாநகரில் அவரது நிறுவனத்தின் தலைமை அலுவலகமும், பல இடங்களில் அவருக்கு சொந்தமான உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன.
கடந்த சில நாள்களுக்கு முன் சீனிவாசனுக்கு தொழிலில் சுமார் ரூ. 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் கோடிக்கணக்கில் கடனும் இருப்பதாகத் தெரிகிறது. கடன் பிரச்னை காரணமாக சீனிவாசன் கடந்த சில நாள்களாக மனஉளைச்சலுடன் காணப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சீனிவாசன் வழக்கம் போல சாப்பிட்டு விட்டு, தனது அறைக்கு தூங்கச் சென்றார். புதன்கிழமை காலை வெகுநேரமாகியும் சீனிவாசன் அறையை விட்டு வெளியே வராததால், அவருடைய மனைவி மோகனஸ்ரீக்கு சந்தேகம் ஏற்பட்டு, சீனிவாசன் அறைக்கு சென்று பார்த்த போது, அவர் அசைவின்றிக் கிடந்துள்ளார்.  படுக்கையின் அருகில் உடலில் மருந்து செலுத்தும் இரு ஊசிகள் கிடந்துள்ளன.
மோகனஸ்ரீயின் அலறல் கேட்டு ஓடி வந்த அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,  அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சீனிவாசனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் சர்க்கரை நோய்க்கு நாள்தோறும் ஊசி மூலமாக உடலில் மருந்து செலுத்தி வந்துள்ளார். கடன் பிரச்னையால் அதிக மருந்தை உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டாரா, மரணத்திற்கு வேறு காரணங்கள் உள்ளதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

SCROLL FOR NEXT