முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் மக்கள் தொடர்பு முகாம்: 162 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

காங்கயத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 162 பேருக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

காங்கயத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 162 பேருக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
காங்கயம் அருகே, பாப்பினி ஊராட்சிக்கு உள்பட்ட வரதப்பம்பாளையத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு,  மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். 
தாராபுரம் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு,  காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினர் உ.தனியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், வருவாய்த் துறையின் சார்பில் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 பயனாளிகளுக்கு ரூ. 2.16 லட்சம் மதிப்பில் முதியோர் உதவித் தொகை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 41 பயனாளிகளுக்கு ரூ. 91ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித் தொகை,  40 பயனாளிகளுக்கு ரூ. 12,00,000 மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்,  ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், தாட்கோ மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.1,51,979 மதிப்பில் மானிய விலையில் கனரக வாகனம் என 162 பயனாளிகளுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் ஊரக வளர்ச்சியின் முகமை திட்ட இயக்குநர் ரமேஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியர் லியாகத், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் முகமது இக்பால்,  காங்கயம் வட்டாட்சியர் மு.மாணிக்கவேலு மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →