செய்யறிவு அபாயம்! மெட்டாவில் 15,000+ பேர் வேலையிழப்பு?
செய்யறிவால் மெட்டா நிறுவனத்தில் 15,000 க்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறித்து...
மெட்டா நிறுவனத்தில் செய்யறிவின் வருகையால் 15,000-க்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்வேறு விதமான பணிகளை எளிமையாகவும் வேகமாகவும் செய்து முடிக்க செய்யறிவு பயன்படுத்தப்படுகின்றது.
இந்த நிலையில் அண்மைக் காலத்தில் பல முக்கிய நிறுவனங்களே செய்யறிவைக் காரணம் காட்டி அதிகளவிலான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கிக் கொண்டே இருக்கின்றன.
Advertisement
Advertisement
பிரபல சமூக வலைதளங்களான முகநூல்(பேஸ்புக்), இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா தனது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 20 சதவிகிதத்தை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக வெளியானத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியான ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் அறிக்கைப்படி, 2025 இல் மெட்டா நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 79,000 ஆகும். அதில் 15 சதவிகிதமான 15,800 ஊழியர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மேலும், செய்யறிவின் வருகை, அதனை பயன்படுத்த நிறுவனம் செய்யும் செலவு போன்றவை இதற்கானக் காரணமாக உள்ளது.
It has been reported that more than 15,000 people will lose their jobs due to the arrival of AI at Meta.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.