வாட்ஸ்ஆப் யூஸர்நேம்: மெட்டா நிறுவனம் அளித்த பதில்; மத்திய அரசு பரிசீலனை?
வாட்ஸ்ஆப் யூஸர்நேம் விவகாரத்தில் மெட்டா நிறுவனம் அளித்த பதிலை மத்திய அரசு பரிசீலனை செய்து வருவது பற்றி...
வாட்ஸ்ஆப் யூஸர்நேம் விவகாரத்தில் மெட்டா நிறுவனம் அளித்த பதிலை மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்ஆப்பை, இந்தியாவில் சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்ஆப்பில் ஒருவர் இன்னொருவரிடம் உரையாடும்போது, இருவரின் செல்போன் எண்ணையும் அவரவர்கள் பார்க்க முடியும்.
இதற்கு மாற்றாக அலைபேசி எண்களைப் பகிராமலேயே யூஸர்நேம் மூலம் தகவல் பரிமாறும் வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த வசதி மூலம் ஆன்லைன் மோசடிகள் நிகழக்கூடும் என்றும் மக்களின் பாதுகாப்பிலும் சமுதாயத்திலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்த மத்திய அரசு இதற்கான விளக்கம் கேட்டு மெட்டா நிறுவனத்துக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது.
இந்த நிலையில், யூஸர்நேம் வசதியின் பாதுகாப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அந்த விளக்கத்தை மெட்டா நிறுவனமானது நேற்று இரவு மத்திய அரசுக்கு அனுப்பியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விளக்கங்களை பரிசீலனை செய்து யூஸர்நேம் வசதியை அறிமுகப்படுத்தலாமா அல்லது தடை விதிக்கலாமா என்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
According to reports, the central government is considering the response given by Meta on the WhatsApp username issue.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.