முகப்பு
திருப்பூர்

சிவன்மலை அடிவாரத்தில் சாமியார்கள் மடத்தில் தீ விபத்து

சிவன்மலை அடிவாரத்தில் சாமியார்கள் தங்கிய மடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 29 மார்ச், 2018 at 8:44 AM
பகிர்:

சிவன்மலை அடிவாரத்தில் சாமியார்கள் தங்கிய மடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
  காங்கயம் அருகே சிவன்மலையில் கோயில் அடிவாரத்தில் உள்ள பொது நூலகத்திற்கு பின்புறம் பழைய கட்டடம் உள்ளது.  ஓடுகளால் வேயப்பட்ட இந்த சிதலமடைந்த கட்டடத்தில் தற்போது யாரும் குடியிருக்கவில்லை. ஆனால், சிவன்மலையில் சுற்றித் திரியும் சாமியார்கள்  அவ்வப்போது இங்கு தங்கிச் செல்வார்கள். 
   இந்நிலையில், புதன்கிழமை மாலை இந்தக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்குத்  தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த  தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.