திருப்பூர் மாநகராட்சியில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய குடிநீர் திட்டப் பணிகளைதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் சி.என்.மகேஸ்வரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய குடிநீர் திட்டப் பணிகளைதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் சி.என்.மகேஸ்வரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாநகராட்சி புதிய இணைப்புப் பகுதிகளுக்கான குடிநீர் விஸ்தரிப்புப் பணிகள் அம்ருத் திட்டம், 2017-2018- ன் கீழ் ரூ.250 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
இதில் திருப்பூர் பாண்டியன் நகரில் 15 லட்சம் கொள்ளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தரைமட்டத் தொட்டி, கவிதா நகரில் 12.50 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி மற்றும் ஜி.எம்.நகரில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு ஆகிய பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் சி.என்.மகேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் குடிநீர் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் நிசார் அஹமது, நிர்வாகப் பொறியளார் ரகுபதி, திருப்பூர் மாநகரப் பொறியாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.