முகப்பு
திருப்பூர்

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி

திருப்பூரில், சாலையோரத்தில் மின்சார ஒயர் உரசியதால் சோளத்தட்டு ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது.

Updated On : 23 ஜனவரி 2019, 9:41 am IST
பகிர்:

திருப்பூரில், சாலையோரத்தில் மின்சார ஒயர் உரசியதால் சோளத்தட்டு ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது.
  திருப்பூர், முதலிபாளையத்தில் இருந்து சோளத்தட்டுகளுடன் நெகமம் பகுதி நோக்கிச் செவ்வாய்க்கிழமை  சென்று கொண்டிருந்த லாரி, வழியில் தெற்குப்பாளையம் அருகே சாலையோரத்தில் மின்சார ஒயரில் உரசியதால் தீப்பிடித்துக் கொண்டது. உடனே ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு உயிர்தப்பினர். சோளத்தட்டில் தீப்பிடித்து மளமளவெனப் பரவியது.
அவ்வழியாகச் சென்ற சிலர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால்,  தீ கொழுந்துவிட்டெறிந்தது.  
 இது குறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர்.  தீ விபத்தில் லாரி முழுவதுமாக எரிந்து சேதமானது.
இது குறித்து ஊத்துக்குளி காவல் துறையினர் லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.