திருப்பூர்

தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுவன் சாவு

திருப்பூர் அருகே திறந்துகிடந்த வீட்டுத் தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தார்.

DIN


திருப்பூர் அருகே திறந்துகிடந்த வீட்டுத் தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர், மேட்டுப்பாளையம் அருகே ஆறுக்கோம்பை வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ்,  தச்சுத் தொழிலாளி. இவரது மகன் சந்தோஷ் (3). இந்நிலையில், சனிக்கிழமை மதியம் வெளியூர் செல்வதற்காக அவர்கள் அனைவரும் தயராகிக் கொண்டிருந்தனர்.   அப்போது, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சந்தோஷை திடீரென காணவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை. இந்நிலையில், வீட்டிற்குள் திறந்திருந்துகிடந்த தண்ணீர் தொட்டிக்குள் எட்டிப் பார்த்துள்ளனர். சந்தோஷ் தொட்டித் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் மீட்கப்பட்டது.
இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT