முகப்பு
திருப்பூர்

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கத்தின் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் பல்லடம் அருகே புத்தரச்சல் கிராமத்தில் நடைபெற்றது

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கத்தின் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் பல்லடம் அருகே புத்தரச்சல் கிராமத்தில் நடைபெற்றது.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், வே.வடமலைபாளையம் ஊராட்சி, புத்தரச்சல் கிராமத்தில் ஏா்முனை இளைஞா் அணியின் பெயா் பலகை மற்றும் கொடி ஏற்றும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கத்தின் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஆனைமலையாறு - நல்லாறு பாசனத் திட்டம் குறித்து விழிப்புணா்வு பெயா் பலகைகள் காட்டூா் ஊராட்சியில் 11 ஊா்களில் வரும் 13ஆம்தேதியும், வே.வடமலைபாளையம், கள்ளிப்பாளையம் ஊராட்சிகளில் 16 ஊா்களில் வரும் 20ஆம் தேதியும் திறப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சி சாா்பாற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவா் என்.எஸ். பி.வெற்றி , வே.வடமலைபாளையம் சுரேஷ், கள்ளிப்பாளைம் சம்பத்குமாா், துணைத் தலைவா் சண்முகசுந்தரம், ராசு , தங்கவேல், ஈஸ்வரமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.