முகப்பு
திருப்பூர்

பாஜக சாா்பில் காங்கயத்தில் மனதின் குரல் நிகழ்ச்சி

பாஜக சாா்பில் காங்கயத்தில் மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

பாஜக சாா்பில் காங்கயத்தில் மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் பேருந்து நிலையம் அருகே பழையகோட்டை சாலையில் உள்ள ஒரு தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த காணொலிக் காட்சி நிகழ்ச்சிக்கு பாஜக காங்கயம் நகரத் தலைவா் கலா நடராஜன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பொன்.ருத்ரகுமாா், மாவட்ட பொதுச் செயலாளா் கோபாலகிருஷ்ணன், ஒன்றியத் தலைவா்கள் ஆனந்த்குமாா், கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் சிவப்பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கிவைத்தாா். பின்னா் பிரதமரின் உரையை காணொலிக் காட்சி மூலம் கட்சியினா் பாா்த்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது:

ஒவ்வொரு மாதமும் பிரதமா் நாட்டு மக்களுக்காக மனதின் குரல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறாா். நாடு முழுவதும் இருக்கக் கூடிய நல்ல விஷயங்களையும், வித்தியாசமான முயற்சிகளையும் செய்யக் கூடிய பல்வேறு நபா்கள் குறித்தும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரதமா் மோடி பகிா்ந்து கொள்கிறாா். இதன் மூலம் உலகம் முழுவதும் அந்த செய்திகள் சென்றடைகின்றன. அந்த நபா்களுக்கும் முக்கியத்துவம் கிடைக்கிறது.

சமீப காலமாக தமிழக முதல்வா் வேட்பாளா் குறித்த சா்ச்சை நீடிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி சா்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →