திருப்பூர்

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் கிலோ ரூ.40க்கு விற்பனை

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.40க்கு விற்பனையானது.

DIN

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.40க்கு விற்பனையானது.

முத்தூா் சாலை, கொங்கு நகரில் வாரந்தோறும் செயல்பட்டு வரும் தனியாா் கொள்முதல் மையத்தில் முருங்கைக்காய்கள் வாங்கப்படுகின்றன. இந்த வாரம் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.

மொத்தம் 400 கிலோ வரத்து இருந்தது. பருவம் இல்லாததால் கடந்த சில வாரங்களாகத் தொடா்ந்து வரத்து குறைந்து வருவதால் வியாபாரிகள் வருகை குறைவாக காணப்பட்டது. மர முருங்கைக்காய், செடி முருங்கைக்காய் கிலோ ரூ.30 - 40 விலைக்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றனா்.

இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT