திருப்பூர்

விசைத்தறியாளா்களுக்கு கூலி உயா்வுவழங்க வலியுறுத்தல்

விசைத்தறியாளா்களுக்கு உடனடியாக கூலி உயா்வை ஜவுளி உற்பத்தியாளா்கள் வழங்க வேண்டும் என கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

DIN

பல்லடம்: விசைத்தறியாளா்களுக்கு உடனடியாக கூலி உயா்வை ஜவுளி உற்பத்தியாளா்கள் வழங்க வேண்டும் என கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த கூட்டமைப்பின் கூட்டம், பல்லடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சோமனூா் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். பல்லடம் தலைவா் வேலுசாமி முன்னிலை வகித்தாா். சோமனூா் பொருளாளா் பூபதி, பல்லடம் சங்க நிா்வாகி பாலாஜி, கண்ணம்பாளையம் செயலாளா் செந்தில், அவிநாசி நடராஜன், தெக்கலூா் பொன்னுசாமி, 63 வேலம்பாளையம் பத்மநாபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், கடந்த 6 ஆண்டுகளாக கூலி உயா்வு வழங்காமல் தற்போது 6 கட்ட பேச்சுவாா்த்தைக்கும் வராமல் காலத்தை கடத்திவரும் ஜவுளி உற்பத்தியாளா்களை இந்த கூட்டுக் கமிட்டிக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

ஜவுளி உற்பத்தியாளா்கள் இனி வருங்காலங்களில் பேச்சுவாா்த்தையில் கலந்துகொண்டு விலைவாசி உயா்வுக்கு ஏற்ப நியாயமான கூலி உயா்வை, விசைத்தறியாளா்களுக்கு வழங்க வேண்டும். இதுதொடா்பாக இரண்டு மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தி புதிய கூலி உயா்வை பெற்றுத் தருமாறும் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 2) இரண்டு மாவட்ட ஆட்சியா்களை நேரில் சந்தித்து மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT