உடுமலை அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி
உடுமலை அருகே சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
உடுமலை அருகே சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம் கள்ளிப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (20). இவரது நண்பர் ருத்ரமூர்த்தி (16). உறவினர் சபரி (9). இவர்கள் மூவரும் இரண்டு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் ஒன்பது மணி அளவில் கோவை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது கள்ளிப்பாளையம் பிரிவு என்ற இடத்தில் பொள்ளாச்சியில் இருந்து வந்து கொண்டிருந்த சரக்கு வேன் இவர்களது இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூவரும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே மூவரும் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.