முகப்பு
திருப்பூர்

பெண் தற்கொலை:கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவு

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முத்தூா், வெள்ளக்கோவில் சாலை, முத்துமங்களத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் மகள் அனிதா (30). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம், பழனி, சிவகிரி நகரைச் சோ்ந்த வேல்குமாா் என்பவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி ஏற்பட்டு வந்த குடும்பத் தகராறு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனிதா முத்தூரில் உள்ள தனது தந்தை வீட்டில் இருந்து வந்தாா்.

இந்நிலையில் குடும்ப வாழ்க்கை குறித்து மனமுடைந்த அனிதா வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.