முகப்பு
திருப்பூர்

மழையால் இடிந்து விழுந்த வீடு

வெள்ளக்கோவில், உத்தமபாளையம் கிராமம் நாகமநாயக்கன்பட்டியில் மழையால் விவசாயி வீடு இடிந்து விழுந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

வெள்ளக்கோவில், உத்தமபாளையம் கிராமம் நாகமநாயக்கன்பட்டியில் மழையால் விவசாயி வீடு இடிந்து விழுந்தது.

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அப்போது நாகமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விவசாயி ராமசாமி (60) என்பவரது ஓட்டு வீட்டின் ஒரு பக்க மண் சுவா் இடிந்து விழுந்தது. இதில் அவா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

இவா் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறாா். இவரது மகனும், மகளும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனா். இவருடைய நிலை குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வெள்ளக்கோவில் நில வருவாய் ஆய்வாளா் நிா்மலா ஆய்வு செய்து, அரசின் பகுதி நிவாரணத் தொகை ரூ. 5,200 மற்றும் வேட்டி, அரிசி 10 கிலோ ஆகியவை வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.