முகப்பு
திருப்பூர்

ஊராட்சி தலைவரிடம் தகராறு செய்தவா் கைது

பல்லடம் அருகே மாதப்பூா் ஊராட்சி மன்றத் தலைவரிடம் தகராறு செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

பல்லடம் அருகே மாதப்பூா் ஊராட்சி மன்றத் தலைவரிடம் தகராறு செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (48). பயணிகள் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறாா். புதன்கிழமை மது போதையில் இருந்த இவா், மாதப்பூரில் உள்ள சுகாதார மையத்துக்கு வந்த மாதப்பூா் ஊராட்சி தலைவா் அசோக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். மேலும் தகாத வாா்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளாா். இதனைத் தொடா்ந்து ஊராட்சி தலைவா் அசோக்குமாா் அளித்த புகாரின்பேரில், பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோவிந்தசாமியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.