முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் அரிய வகை நட்சத்திர ஆமை கண்டெடுப்பு

திருப்பூர் அருகே சாலையில் அரியவகை நட்சத்திர ஆமை செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

திருப்பூர்: திருப்பூர் அருகே சாலையில் அரியவகை நட்சத்திர ஆமை செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

திருப்பூர் பூலுவப்பட்டி பழனிச்சாமி நகரை சேர்ந்தவர் சிவானந்தம் இவர் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது பூலுவபட்டி அருகே  சாலையில்  நட்சத்திர ஆமை குட்டி ஒன்று நகர்ந்து சென்று கொண்டிருந்ததை கண்டார்.

வாகனங்கள் அதிகம் பயணிக்கும் பகுதி என்பதால் உடனடியாக ஆமையை  பாதுகாப்பாக எடுத்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றார். அங்கு ஆமைக்கு தேவையான உணவை அவரது குடும்பத்தினர் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்தனர்.  நட்சத்திர ஆமை அரிய வகை என்பதால் சிவானந்தம் உடனடியாக  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து திருப்பூர் வனத்துறை ஊழியர் சிவமணி நேரடியாக சிவானந்தம் வீட்டிற்கு வந்து ஆமையை சோதனை செய்தார். பின்னர் அவரிடம் நட்சத்திர ஆமையை சிவானந்தம் குடும்பத்தினர்  பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.  திருப்பூரில் அரிய வகையான நட்சத்திர ஆமை எப்படி வந்தது என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.