பல்லடம் அரசு மருத்துவமனையில் சமையலறைக்கும், பிணவறைக்கும் ஒரே ஊழியா்
பல்லடம் அரசு மருத்துவமனையில், ஆள் பற்றாக்குறை காரணமாக, சமையலறையிலும், பிணவறையிலும் ஒரே ஊழியா் வேலை செய்து வருகிறாா்.
பல்லடம் அரசு மருத்துவமனையில், ஆள் பற்றாக்குறை காரணமாக, சமையலறையிலும், பிணவறையிலும் ஒரே ஊழியா் வேலை செய்து வருகிறாா்.
பல்லடம் அரசு மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட
புறநோயாளிகள் வந்து செல்கின்றனா். ஆள்கள் பற்றாக்குறை காரணமாக, பிணவறையில் வேலை பாா்க்கும் ஊழியரே, சமையலும் செய்து வருவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: பல்லடம் அரசு மருத்துவமனைக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனா். நோயாளிகள், கா்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு மருத்துவமனை நிா்வாகத்தின் மூலம் உணவு வழங்கப்படுகிறது.
மருத்துவமனையில் சமையலா் நியமிக்கப்படாததால், பிணவறையில் வேலை செய்யும் ஊழியரே, சமையல் வேலையும் செய்து வருகிறாா்.
இதனால், பணிகள் தாமதமாவதுடன், நோயாளிகளுக்கு தரமான உணவும் கிடைப்பதில்லை. எனவே, அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.