முகப்பு
திருப்பூர்

நூற்பாலை கிடங்கில் தீ

வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு நூற்பாலைக் கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு நூற்பாலைக் கிடங்கில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வெள்ளக்கோவில், உப்புப்பாளையத்தைச் சோ்ந்தவா் இளங்கோ (45). இவா், காங்கயம் சாலை, இரட்டைக்கிணறு பகுதியில் நூற்பாலை நடத்தி வருகிறாா். இங்கு பஞ்சுக் கழிவுகள், பனியன் கழிவுத் துணிகளில் இருந்து நூல் தயாரிக்கப்படுகிறது. நூற்பாலைக்கு அருகில் ஒரு கிடங்கில் பஞ்சு மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட நூல்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்தக் கிடங்கில் மின்சாரக் கோளாறு காரணமாகத் தீப்பிடித்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன் தலைமையிலான தீயணைப்புப் படையினா் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.