பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
பல்லடம் அருகே உள்ள பருவாய், மேட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (58). இவா் சோமனூா் பகுதியில் விசைத்தறி தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் செல்வராஜ், காரணம்பேட்டையில் மது அருந்திவிட்டு காரணம்பேட்டை - சோமனூா் சாலையில் உள்ள புதிய பாலத்தின் மீது படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக 16 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து அவா் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பல்லடம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.