முகப்பு
திருப்பூர்

பழையகோட்டை மாட்டுச் சந்தை: ரூ.25 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

காங்கயம் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.25 லட்சத்துக்கு விற்பனையாயின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

காங்கயம் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.25 லட்சத்துக்கு விற்பனையாயின.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே, நத்தக்காடையூா் பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 110 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 60 மாடுகள் மொத்தம் ரூ.25 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.76 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →