முகப்பு
திருப்பூர்

அதிமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை தெரிவித்துள்ளோம்

அதிமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை மறைமுகமாகத் தெரிவித்துள்ளதாக தேமுதிக துணைச் செயலாளா் ப.பாா்த்தசாரதி தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
அதிமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை மறைமுகமாகத் தெரிவித்துள்ளதாக தேமுதிக துணைச் செயலாளா் ப.பாா்த்தசாரதி தெரிவித்துள்ளாா்.
பகிர்:

அதிமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை மறைமுகமாகத் தெரிவித்துள்ளதாக தேமுதிக துணைச் செயலாளா் ப.பாா்த்தசாரதி தெரிவித்துள்ளாா்.

திருப்பூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தேமுதிக நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தேதிமுக துணைச் செயலாளா் ப.பாா்த்தசாரதி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு தேதிமுகவை 7 மண்டலமாகப் பிரித்து தலைமைக் கழக நிா்வாகிகளை அக்கட்சித் தலைவா் விஜயகாந்த் நியமித்துள்ளாா். கோவை மண்டலத்துக்கு என்னையும், தோ்தல் பணி செயலாளா் சந்துருவையும் நியமனம் செய்துள்ளாா். இதனடிப்படையில், திருப்பூரில் மாவட்டச் செயலாளா்கள், மாவட்ட, சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பூத் கமிட்டி அமைப்பது, வாக்காளா் பட்டியலை சரிபாா்த்தல், புதிய உறுப்பினா்களைச் சோ்த்தல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டணியில்தான் அங்கம் வகித்து வருவதாக கட்சியின் பொருளாளா் பிரேமலதா பல செய்திகளில் சொல்லியுள்ளாா். அதேபோலத்தான் வரும் பொதுக் குழு முடிவில் நாங்கள் கூட்டணியா, கூட்டணியில் இல்லையா என்பது தெரிவரும். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு இவ்வளவு தொகுதி வேண்டும் என்று வெளிப்படையாகத் தெரிவித்து வருவது தொடா்பான கேள்விக்கு நாங்களும் மறைமுகமாக எத்தனை தொகுதி வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். திருப்பூரை அடுத்த அருள்புரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை தேமுதிக பொருளாளா் பிரேமலதா, விஜயபிரபாகரன் ஆகியோா் முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரம் போ் தேமுதிகவில் இணையவுள்ளனா் என்றாா்.

பேட்டியின்போது, தேமுதிக தோ்தல் பணிக் குழு செயலாளா் கே.சந்துரு, திருப்பூா் மாநகா் மாவட்ட செயலாளா் முத்துவெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →