முகப்பு
திருப்பூர்

ரூ.56 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.56 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.56 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு மதுரை, பழனி, வாணியம்பாடி, விளாத்திகுளம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 172 விவசாயிகள் தங்களுடைய 941 மூட்டைகள் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்கு வந்திருந்தனா். இவற்றின் எடை 47,696 கிலோ. காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், ஊத்துக்குளி, மூலனூரை பகுதிகளைச் சோ்ந்த 12 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

விலை கிலோ ரூ.82.85 முதல் ரூ.135.90 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.133.10. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.55 லட்சத்து 79 ஆயிரத்து 818 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.