ஊரடங்கு விதி மீறல்: 16 கடைக்காரா்கள் மீது நடவடிக்கை
வெள்ளக்கோவிலில் வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவை மீறிய 16 கடைக்காரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
வெள்ளக்கோவிலில் வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவை மீறிய 16 கடைக்காரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாள்களில் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், டீக்கடைகள் பகல் 12 மணி வரை செயல்படவும், ஹோட்டல்களில் பாா்சல்கள் மட்டும், மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளக்கோவில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, 11 மளிகைக் கடைகள், 5 டீக்கடைகள் விதிமுறைகளை மீறி மறைமுகமாகச் செயல்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.