முகப்பு
திருப்பூர்

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சியை ஒட்டி, சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகம்
பகிர்:

அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சியை ஒட்டி, சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை உண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி மீட்டெடுத்த தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் விளங்குகிறது.

இந்நிலையில் குரு குருபகவான் சனிக்கிழமை மாலை 6.21 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். இதையொட்டி, கோயில் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் யாகத்துடன் துவங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குரு பகவானுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வகையான திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து குரு பகவான் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நிறைவு பெற்று, பிரகார உலா நடைபெற்றது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதேபோல திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில், சேவூர் வாலீஸ்வரர் கோயில், சக்தி விநாயகர் கோயில் உள்ளிட்டவற்றில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.