முகப்பு
திருப்பூர்

அவிநாசி அருகே இருசக்கர வாகன விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவன் பலி

அவிநாசி அருகே தெக்கலூரில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவன் உயிரிழந்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம்.
பகிர்:

அவிநாசி அருகே தெக்கலூரில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவன் உயிரிழந்தார்.

கேரளா மாநிலம், பாலக்காடு கடம்பள்ளிபுர் வேட்டைக்காரன் குளிக்கண்டம் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் மகன் இர்சத் அகமது(27). மருத்துவக் கல்லூரி மாணவன். இந்நிலையில் இவரது மூத்த சகோதரர் சைலாவுதீன்(31).

இவர்கள் இருவரும் வெவ்வேறு இருசக்கர வாகனத்தில் ஈரோடு மாவட்ட கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பாலாக்காடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். சேலம்-கொச்சின் ஆறுவழிச்சாலை அவிநாசி-தெக்கலூர் வடுகாபாளையம் பிரிவு அருகே போது, இர்சத் அகமது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் பலத்த காயமடைந்த இர்சத் அகமது சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து இர்சத் அகமது உடல் பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →