முகப்பு
திருப்பூர்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள்

ஊத்துக்குளி ஒன்றியத்தில் ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதரத்தைப் பாதுகாக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டுக்கல், அம்மிக்கல் தயாரிக்கும் தொழிலாளர்கள்.
பகிர்:

ஊத்துக்குளி ஒன்றியத்தில் ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதரத்தைப் பாதுகாக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்தில் ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல் தயாரிக்கும் தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கல் குவாரிகளில் இருந்து கல் எடுத்து அதன்மூலம் அம்மிக்கல், ஆட்டுக்கல், கிரைண்டர் கல் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். 

இங்கு வெடிமருந்து பயன்படுத்தி பாறைகளைத் தகர்க்கும் முறைகள் கையாளப்படுவதில்லை. அதே வேளையில் பாறைக்குழியில் தண்ணீர் ஊற்றி டிரில்லிங் செய்தும், கைகளால் வடிவமைத்தும் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. இத்தொழிலுக்குத் தேவையான கற்கள் வெட்டி எடுக்க தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் கிரைண்டர் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள 40 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதரமும் கேள்விக்குறியாகியுள்ளது. 

ஆகவே, ஆட்டுக்கல், அம்மிக்கல், கிரைண்டர் கல் வெட்டி எடுக்கும் குடிசைத் தொழிலுக்கு அனுமதி அளித்து எங்களது வாழ்வாதரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →