முகப்பு
திருப்பூர்

அல்லாளபுரத்தில் அரசின் பொது மருத்துவ முகாம்

பல்லடம் அருகே, அல்லாளபுரத்தில் வருமுன் காப்போம் சிறப்பு பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

பல்லடம் அருகே, அல்லாளபுரத்தில் வருமுன் காப்போம் சிறப்பு பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூா் ஊராட்சி அல்லாளபுரத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு மருத்துவ முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சுடா்விழி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பங்கேற்று 900 பேருக்கு பல்வேறு நோய்களுக்கு, பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினா்.

இந்த முகாமில், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இல.பத்மநாபன், பல்லடம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளா் சோமசுந்தரம், மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் ராஜேந்திரன், பல்லடம் ஒன்றிய குழுத் தலைவா் தேன்மொழி, துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம், ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஜெயந்தி கோவிந்தராஜ், நாகேஸ்வரி சோமசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.