ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா். 
திருப்பூர்

பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.பரமசிவம் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்ற பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் கூறியதாவது: தமிழக அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வீதம் உயா்த்தி பசும் பால் ரூ.42 எனவும், எருமைப் பால் ரூ.51 எனவும் கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும். புதிதாகப் பொறுப்பேற்ற திமுக அரசு பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளதால் ஆவினுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படும். இதனை ஈடுகட்டும் வகையில் தமிழக அரசு மானியம் வழங்கி ஆவினைப் பாதுகாக்க வேண்டும். குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தில் ஆவின் பால் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.கே.கொளந்தசாமி, மாவட்ட நிா்வாகி எஸ்.வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT