அவிநாசியை நகராட்சியாக அறிவிக்க கொமதேக வலியுறுத்தல்
அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக தமிழக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என கொமதேகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக தமிழக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என கொமதேகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
கொமதேக வடக்கு மாவட்டம், மேற்கு ஒன்றியக் கூட்டம் அவிநாசி அருகே கருவலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சுகுமார் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் சுதர்சன் கந்தசாமி, மாவட்டத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பொருளார் நந்தகுமார், ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சுரேஷ் வரவேற்றார். மாநிலப் பொருளாளர் கே.கே.சி.பாலு பேசினார். இதில், அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக அறிவிக்க வேண்டும். அத்திக்கடவு திட்டத்தை திட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.விவசாய மின் இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.
Advertisement
இதையும் படிக்க- பிரதமா் மோடியின் செயல்பாடுகளுக்கு 70% போ் ஆதரவு
விண்ணப்பித்த அனைவருக்கும் விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும். அவிநாசி-சேவூர், அன்னூர் மாநில நெடுஞ்சாலைகளை நான்கு வழிச்சாலைகளை மாற்ற வேண்டும். சோமனூரில் ஜவுளி சந்தை அமைப்பதாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் மாவட்ட தலைமை நிலைய செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, ராயப்பன் மருதாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.