தேசிய நெடுஞ்சாலையில் வீசப்பட்ட கழிவு மூட்டைகள்
வெள்ளக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கழிவு மூட்டைகள் வீசப்பட்டுள்ளது குறித்து, காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கழிவு மூட்டைகள் வீசப்பட்டுள்ளது குறித்து, காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளக்கோவில் வழியாக நாகப்பட்டினம் - கூடலூா் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இந்த சாலை கோவை, கரூா், திருச்சி, தஞ்சாவூா் ஆகிய நகரங்களையும் இணைக்கிறது. இந்தச் சாலையில், இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், கட்டட கழிவுகள் அடங்கிய 300 க்கும் மேற்பட்ட கழிவு மூட்டைகளை மா்ம நபா்கள் இரவு நேரத்தில் கொட்டிச் செல்கின்றனா்.
கழிவுகளை உண்ண வரும் நாய்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, கழிவுகளை கொட்டிச் செல்லும் மா்ம நபா்கள் மீது காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.