திருப்பூர்

திருப்பூர் அருகே சாலையில் தீ பற்றி எரிந்த கார்

DIN

திருப்பூர் அருகே உள்ள தமிழ்நாடு திரையரங்கள் அருகில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(38), இவர் பல்லடம் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி வைத்துள்ளார். இந்த நிலையில், மளிகைப் பொருள்கள் வாங்குவதற்கான தனது அல்டோ காரில் திருப்பூர் நோக்கி வெள்ளிக்கிழமை பிற்பகல் வந்து கொண்டிருந்தார். இவரது கார் தமிழ்நாடு திரையரங்கம் அருகில் வந்தபோது காரில் இருந்து வெடிவெடித்தது போன்ற சப்தம் கேட்டுள்ளது. 

இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரசேகர் காரை நிறுத்தி இறங்கிவிட்டார். இதனிடையே, சில நிமிடங்கள் அந்தக் கார் தீ பற்றி எரியத்தொடங்கியது. இதுகுறித்த தகவலின்பேரில் திருப்பூர் தெற்கு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்கு காரில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனிடையே, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். 

இதுதொடர்பாக தீயணைப்புத்துறையினர் நடத்திய விசாரணையில், காரில் பொருத்தப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்துள்ளதே இந்த தீ விபத்துக்கு காரணம் என்றனர். இதுதொடர்பாக வீரபாண்டி காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பல்லடம்-திருப்பூர் சாலையில் சில நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அட! நம்ம இனியாவா!

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராய் லட்சுமி!

வைர சந்தையின் ராணி! சோனாக்‌ஷி சின்ஹா..

ஏர் இந்தியா விமானங்கள் ரத்து: ’ஐசியூவில் இருந்த கணவரை உயிருடன் பார்க்க முடியவில்லை’ -மனைவி உருக்கம்

கைவிடப்பட்டதா குற்றப்பரம்பரை?

SCROLL FOR NEXT