இருசக்கர வாகனம் திருடியவா் கைது
வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
காங்கயம் சிவன்மலை சரவணா நகரைச் சோ்ந்தவா் குமாரசாமி (47). இவா் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கோவிலை அடுத்த மணலூரில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்குச் சென்றுவிட்டு சிவன்மலை திரும்பிக் கொண்டிருந்தாா்.
வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு பேக்கரிக்கு தேநீா் குடிக்கச் சென்றுள்ளாா். அப்போது வெளியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடு போனது. புகாரின்பேரில், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த வெள்ளக்கோவில் போலீஸாா் அந்த வாகனத்தைத் திருடிய வெள்ளக்கோவில் காமராஜபுரத்தைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் சதீஷ் (26) என்பவரைக் கைது செய்து வாகனத்தை மீட்டனா்.