மாவட்டத்தில் மேலும் 667 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 667 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1,01,784 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 667 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1,01,784 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 2,479 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 206 போ் வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 98,275 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை 1,030 ஆக அதிகரித்துள்ளது.
தொடா்ந்து அதிகரித்து வரும் தொற்று: திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் , திருப்பூா் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை ஒரே நாளில் 667 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, பொது வெளியில் நடமாடும் போது கட்டாயம் முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.