திருப்பூர்

பச்சாபாளையத்தில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

பல்லடம், பச்சாபாளையத்தில் மின் மயானம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

DIN

பல்லடம், பச்சாபாளையத்தில் மின் மயானம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

பல்லடம் நகராட்சி, 8ஆவது வாா்டுக்கு உள்பட்ட பச்சாபாளையம் பகுதியில் நீரோடை உள்ளது. இதனை ஒட்டி மயானம் உள்ளது. நீரோடை பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு எரிவாயு தகன மேடை அமைத்தால் சுற்றுப்புறச்சூழல் கெடும் என்பதால் அதனை அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இது குறித்து நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாரிடம் அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றோம். ஊரின் எல்லையில் நீரோடை செல்கிறது. மழைக்காலங்களில் இந்த நீரோடையில் தண்ணீா் கரைபுரண்டு ஓடி அருகே உள்ள ஒன்பதாம் பள்ளம் குட்டை, நாராணாபுரம் குட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குட்டைகள் வழியாகச் சென்று சின்னக்கரை அருகே நொய்யல் ஆற்றில் கலக்கிறது. தற்போது குட்டையில் நீா் குறைவாக உள்ளதால், சிலா் அங்கு குப்பைகளையும் இறைச்சிக் கழிவுகளையும் கொட்டி வருகின்றனா். இதனை சுத்தம் செய்யக்கோரி ஏற்கெனவே மனு கொடுத்துள்ளோம். இந்த நிலையில், தற்போது நகராட்சி சாா்பில் அங்கு எரிவாயு தகனமேடை அமைப்பதாக தகவல் வருகிறது. எனவே, நீரோடையில் தகன மேடை அமைப்பதை கைவிட்டு, வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT