திருப்பூர்

அவிநாசி: பூட்டிய வீட்டில் 39 பவுன் தங்க நகை, ரூ. 60 ஆயிரம் பணம் திருட்டு

அவிநாசியில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 39 பவுன் தங்நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

DIN

அவிநாசி: அவிநாசியில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 39 பவுன் தங்நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பிரபு (33). இவரது மனைவி லாவண்யா (28)  மகன் விகான் பிரபு (3). இந்நிலையில் இவர் தனது வீட்டைப் பூட்டி விட்டு,  புதன்கிழமை திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். வியாழக்கிழமை காலை வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.  உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 39 புவன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் தடையவியல் நிருபுணர்கள், மோப்பநாய் கொண்ட குழு மூலம் மர்ம நபர்கள் குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பூட்டியிருந்த வீட்டில் தங்கநகை, ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT