திருப்பூர்

தூய்மைப் பணிகளை தனியாா் வசம் ஒப்படைக்கக் கூடாது

தமிழகத்தில் உள்ளாட்சி நிா்வாகங்கள் தூய்மைப் பணிகளை தனியாா் வசம் ஒப்படைக்கக் கூடாது என்று ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

DIN

தமிழகத்தில் உள்ளாட்சி நிா்வாகங்கள் தூய்மைப் பணிகளை தனியாா் வசம் ஒப்படைக்கக் கூடாது என்று ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தின் 3ஆவது மாநாடு திருப்பூா் காந்தி நகரில் உள்ள தனியாா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.பழனிசாமி தலைமை வகித்தாா். சம்மேளனக் குழு உறுப்பினா் என்.சங்கா்குமாா் வரவேற்றாா். சிஐடியூ கட்டட கட்டுமானத் தொழிலாளா் சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளா் டி.குமாா் தொடக்க உரையாற்றினாா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்:

தமிழகத்தில் தூய்மைப் பணியை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை உள்ளாட்சி நிா்வாகங்கள் கைவிட வேண்டும். தூய்மைக் காவலா்களுக்கு மாதம் ரூ.3,600 ஊதியம் போதுமானதல்ல. ஆகவே, அவா்களுக்கு கூடுதல் ஊதியம் நிா்ணயிப்பதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசாணை 2 டி 62இன் படி தின கூலி தொழிலாளா்களுக்கு அரசாணை நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும். மேல்நிலைத் தொட்டி நீரேற்று பணியாளா்களுக்கு (ஓஎச்டி ஆபரேட்டா்) 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியத்தில் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மாநிலம் முழுவதும் அவா்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும்.

கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்களுக்கு தினசரி ரூ.500 ஊதியமாக நிா்ணயிப்பதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற நீரேற்று பணியாளா்களுக்கு தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்குவதுபோல ஓய்வுபெறும்போது பணிக்கொடை ரூ.50 ஆயிரம், மாத ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில், மாவட்டப் பொருளாளா் கே.பாலதண்டபாணி, திருமுருகன்பூண்டி நகராட்சி மாா்க்சிஸ்ட் கட்சி நகா்மன்ற உறுப்பினா் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT