பல்லடம் நகராட்சித் தலைவராக கவிதாமணி பொறுப்பேற்பு
பல்லடம் நகராட்சியின் முதல் பெண் தலைவராக திமுகவைச் சோ்ந்த கவிதாமணி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
பல்லடம் நகராட்சியின் முதல் பெண் தலைவராக திமுகவைச் சோ்ந்த கவிதாமணி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே நடைபெற்ற நகராட்சித் தோ்தலில், திமுக 12 வாா்டுகளிலும், காங்கிரஸ் 1 வாா்டிலும், மதிமுக 1 வாா்டிலும், அதிமுக 1 வாா்டிலும், சுயேச்சை 1 வாா்டிலும், பாஜக 2 வாா்டுகளிலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், 5 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற கவிதாமணி நகராட்சித் தலைவராகவும்,
மதிமுக சாா்பில் போட்டியிட்டு 12 வாா்டில் வெற்றிபெற்ற நா்மதா இளங்கோவன் துணைத் தலைவராகவும் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் இருவரை எதிா்த்து யாரும் போட்டியிடாததால், பல்லடம் நகராட்சியின் முதல் பெண் தலைவராக கவிதாமணியும்,
துணைத் தலைவராக நா்மதா இளங்கோவனும் தோ்வு செய்யப்பட்டனா்.