திருப்பூர்

பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

DIN

அவிநாசி: பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும், பழமைவாய்ந்ததுமான பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் தேர்த்திருவிழா மார்ச் 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதைத்தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. 

முக்கிய நிகழ்ச்சியாக 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காப்புக்கட்டி பூசாரிகள் கைக்குண்டம் வாரி இறங்குதல், இதில் ஆயிரக்கணக்கான வீரமக்கள் மஞ்சள் நிறத்தில் ஆடைகள் அணிந்து வரிசையாக வந்து, பரவசத்துடன் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 

திருவிழாவுக்கு, பெருமாநல்லுரைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து, விரதம் இருந்து, மாலை அணிந்து, தீச்சட்டி (பூவோடு) ஏந்தி, பாத யாத்திரையாக பெருமாநல்லூருக்கு நடந்து வந்தனர். அதிகாலையில் 4 மணிக்கு கோயிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த 60 அடி குண்டத்தில் இறங்குவதற்காக இரவு முழுவதும் 2 கிலோமீட்டர் தொலைவில் நீண்ட வரிசையில் கைக்குழந்தைகளுடன் காத்திருந்தனர். 

இதையடுத்து குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிஷேகம், அம்மன் பூத வாகன காட்சியுடன் புறப்பாடும் நடைபெற்றது.  மாலை 4 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல் நடைபெற்று, திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடும் பனிப்பொழிவுடன் அடர் பனிமூட்டம் - புகைப்படங்கள்

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

SCROLL FOR NEXT