முகப்பு
திருப்பூர்

பல்லடம் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

பல்லடம் அருகே கத்தியால் குத்தி இளைஞா் படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

பல்லடம் அருகே கத்தியால் குத்தி இளைஞா் படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை லட்சுமி நகா் பகுதியில் 30 வயது மதிக்கதக்க ஒருவா் ரத்த காயங்களுடன் கிடப்பதாக பல்லடம் போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்த்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞா் சடலம் கிடந்தது தெரியவந்தது. மேலும் அவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. போலீஸாா், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில் கொலையானவா், பல்லடம், அருள்புரம் பகுதியைச் சோ்ந்த ராமநாதன் மகன் கோபால் (30) என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.