முகப்பு
திருப்பூர்

வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் திருட்டு

பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பொங்கலுாா் ஒன்றியம் இலவந்தியைச் சோ்ந்தவா் பழனிசாமி (58). ஆவின் கூட்டுறவு சங்க செயலாளராக பணிபுரிகிறாா். இவா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வியாழக்கிழமை வெளியே சென்றுள்ளாா். பின்னா் வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் பீரோவில் வைத்திருந்த 21 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து பழனிசாமி அளித்த புகாரின்பேரில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.