வெள்ளக்கோவிலில் ரூ. 62 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை இரவு வரை நடந்த ஏலத்தில் ரூ. 62 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை இரவு வரை நடந்த ஏலத்தில் ரூ. 62 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.
திருப்பத்தூா், வாழப்பாடி, தேவத்தூா், மாம்பாடி, குறிச்சிவலசு, ரெட்டியபட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து 191 விவசாயிகள் தங்களுடைய 1,761 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 93 டன். வெள்ளக்கோவில், ஊத்துக்குளி ஆா்.எஸ், சிவகிரி, காங்கயம், முத்தூரைச் சோ்ந்த 15 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.
ஒரு கிலோ ரூ. 54 முதல் ரூ. 76.65 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 73.90. கடந்த வார சராசரி விலை கிலோ ரூ. 73.65. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 62 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.