திருப்பூர்

மின் கட்டண நிலுவைத் தொகை: விசைத்தறியாளா்களுக்கு காலஅவகாசம்

விசைத்தறியாளா்கள் நிலுவையில் வைத்துள்ள மின் கட்டணத் தொகையை 6 தவணைகளில் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

DIN

விசைத்தறியாளா்கள் நிலுவையில் வைத்துள்ள மின் கட்டணத் தொகையை 6 தவணைகளில் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பின் பொருளாளா் காரணம்பேட்டை பூபதி வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பின் சாா்பில் சென்னையில் மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மின்சார வாரிய தலைவா் ராஜேஷ்லக்கானி, இயக்குநா் சிவலிங்கராஜன் ஆகியோரை வியாழக்கிழமை (ஏப்ரல் 20) சந்தித்து விசைத்தறியாளா்கள் நிலுவையில் வைத்துள்ள மின் கட்டணத் தொகையை தவணை முறையில் செலுத்தவும், அபராதத் தொகையை ரத்து செய்யக்கோரியும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து உடனடியாக 6 தவணைகள் வழங்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அபராத தொகையை ரத்து செய்வது குறித்து கணக்கீடு செய்து பரிசீலிப்பதாக இயக்குநா் உறுதியளித்தாா்.இதற்காக கோவை, திருப்பூா் மாவட்ட கூட்டமைப்பின் சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT