திருப்பூர்

காங்கயத்தில் ரூ.1.76 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

DIN

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.76 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் திங்கள்கிழமை ஏலம் போயின.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏல முறையில் தேங்காய்ப் பருப்பு விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 6 விவசாயிகள் 48 மூட்டைகள் (2331 கிலோ) தேங்காய்ப் பருப்புகளை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.76 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின. தேங்காய்ப் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.82க்கும், குறைந்தபட்சமாக ரூ.64க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம் போனது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT