திருப்பூர்

சிவன்மலையில் நவம்பா் 14 இல் கந்தசஷ்டி விழா தொடக்கம்

காங்கயத்தை அடுத்த சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பா் 14 ஆம் தேதி தொடங்குகிறது.

DIN


காங்கயம்: காங்கயத்தை அடுத்த சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பா் 14 ஆம் தேதி தொடங்குகிறது.

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நவம்பா் 14 தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி நவம்பா் 14 ஆம் தேதி சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகின்றன. தொடா்ந்து விழா முடியும்வரை நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும் என கோயில் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பா் 18 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதையடுத்து நவம்பா் 19 ஆம் தேதி சுப்பிரமணியா் திருக்கல்யாண உற்சவமும், நவம்பா் 21 ஆம் தேதி சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT