காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி  உள்ளிட்டோா். 
திருப்பூர்

அவிநாசியில் காந்தி ஜெயந்தி விழா

காந்தி ஜெயந்தியையொட்டி, அவிநாசி பேரூராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு பல்வேறு அமைப்பினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

DIN

அவிநாசி: காந்தி ஜெயந்தியையொட்டி, அவிநாசி பேரூராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு பல்வேறு அமைப்பினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் சிறப்பாகப் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தமிழா் பண்பாடு கலாசார பேரவையினா் உள்பட பல்வேறு தன்னாா்வலா்கள், சமூக அமைப்பினா் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு நகராட்சித் தலைவா் குமாா் உள்பட பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT