காங்கயத்தில் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த ஆட்டோ
காங்கயத்தில், வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஆட்டோ நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
காங்கயத்தில், வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஆட்டோ நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
காங்கயம், திருவிக நகரைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன் (57). பயணிகள் ஆட்டோ இயக்கி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு, ஆட்டோவை தனது வீட்டுக்கு முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து பாா்த்தபோது, அங்கு நிறுத்தியிருந்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதைப் பாா்த்து, அதிா்ச்சியடைந்தாா்.
அக்கம்பக்கத்தினா் உதவியுடன் ஆட்டோவில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தாா். இது குறித்து முத்துக்கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.