முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 22 மரங்களை அகற்ற ஏலம்

வெள்ளக்கோவில் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் 22 மரங்களை அகற்ற புதன்கிழமை பொது ஏலம் நடத்தப்பட்டது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 8:06 PM
பகிர்:

வெள்ளக்கோவில் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் 22 மரங்களை அகற்ற புதன்கிழமை பொது ஏலம் நடத்தப்பட்டது.

வெள்ளக்கோவில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் உட்கோட்ட பொறியாளா் ரவிச்சந்திரன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

நத்தக்காடையூா் - உத்தமபாளையம் மாவட்டச் சாலையில், சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக உள்ள 18 மரங்கள், காங்கயம் - கொடுமுடி மாநிலச் சாலையில் 4 மரங்களை அகற்ற ஏலம் நடைபெற்றது. இதில் மொத்தம் 47 போ் பங்கேற்றனா். அதிக ஏலத் தொகையான ரூ.40,500-க்கு ஏலம் இறுதி செய்யப்பட்டது. இதில் 19 புளிய மரங்கள், 2 வாதநாராயணண் மரங்கள், 1 வாகை மரம் அகற்றப்படுகின்றன. இவற்றை அகற்ற திருப்பூா் மாவட்ட பசுமை தீா்ப்பாயத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

மரங்களை அகற்றியவுடன் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்படும். அவற்றுக்கு ஈடாக புதிதாக மரக்கன்றுகள் நடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொது ஏலத்தின்போது உட்கோட்ட உதவிப் பொறியாளா் சத்யபிரபா மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.